சினிமா செய்திகள்

கிம் கர்தாஷியன் -  பீட் டேவிட்சன்

பிரிந்த பிரபல சினிமா ஜோடிகள்

Published On 2022-08-06 17:49 IST   |   Update On 2022-08-06 17:49:00 IST
  • மிகவும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன்.
  • இவர் கடந்த 9 மாதங்களாக பீட் டேவிட்சனை காதலித்து வந்தார்.

உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன். இவர் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். மாடல் அழகியாகவும் இருக்கிறார். கிம் கர்தாஷியன் கடந்த 2014-ல் பிரபல பாப் பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மேலும், கிம் கர்தாஷியன் தன் கண்வர் கென்யே வெஸ்டை விவாகரத்து செய்துள்ளார்.


கிம் கர்தாஷியன் -  பீட் டேவிட்சன்

இதையடுத்து, கிம் கர்தாஷியன், காமெடி நடிகர் பீட் டேவிட்சனை கடந்த ஒன்பது மாதங்களாக காதலித்து வந்தார். இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்த பிரபல காதல் ஜோடி தங்கள் காதலை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

Tags:    

Similar News