சினிமா செய்திகள்

கட்டா குஸ்தி

null

ஆண தூக்கி முன்னவச்சு பொண்ண தூக்கி பின்னவச்சான்.. கவனம் ஈர்க்கும் 'கட்டா குஸ்தி' பட பாடல்..

Update: 2022-11-29 13:12 GMT
  • விஷ்ணு விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
  • இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.


கட்டா குஸ்தி

'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


கட்டா குஸ்தி போஸ்டர்

இந்நிலையில், இந்த படத்தின் மூன்றாவது பாடலான 'சண்ட வீரச்சி' பாடல் வெளியாகியுள்ளது. விவேக் வரிகளில் கிடாக்குழி மாரியம்மாள் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.Full View


Tags:    

Similar News