சினிமா செய்திகள்

பரத்

வெளியானது பரத் படத்தின் வித்தியாசமான போஸ்டர்

Update: 2022-06-29 10:30 GMT
  • பரத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் முன்னறிவான்.
  • இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக ஜனனி நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பரத். இவரின் 50-வது படமான லவ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து பரத் - வாணி போஜன் இணைந்து நடித்து வரும் படம் மிரள்.

இந்நிலையில், இயக்குனர் விஜய்ராஜ் இயக்கத்தில் பரத் நடிக்கும் திரைப்படம் முன்னறிவான். இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக ஜனனி இணைந்துள்ளார். மேலும், கரு.பழனியப்பன், மிர்ச்சி செந்தில், அசார், சிங்கம்புலி, சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


முன்னறிவான் போஸ்டர்

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Tags:    

Similar News