சினிமா செய்திகள்

துணிவு

மீண்டும் வெளியாகும் அஜித்தின் துணிவு திரைப்படம்

Update: 2023-02-03 05:26 GMT
  • அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • 'துணிவு' திரைப்படத்தின் ஓடிடி வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

துணிவு


போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


துணிவு

இந்நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


Full View


Tags:    

Similar News