சினிமா செய்திகள்

மீனா

null

அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும்.. மீனா உருக்கம்

Update: 2022-08-14 04:29 GMT
  • பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீரென உயிரிழந்தார்.
  • கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வருகிறார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 27-ஆம் தேதி மரணம் அடைந்தார். பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி, நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி வருகிறார்.

 

இந்நிலையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும்.

 

மீனா 

ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன்." இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


Tags:    

Similar News