சினிமா செய்திகள்

ஆகான்க்சா துபே

நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவருடைய தாயார் குற்றச்சாட்டு

Published On 2023-03-29 09:01 IST   |   Update On 2023-03-29 09:01:00 IST
  • பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (வயது 25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை கண்டெடுக்கப்பட்டார்.
  • நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவரது தாயார் கோரிக்கை விடுத்து உள்ளார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (வயது 25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை கண்டெடுக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, அதுபற்றி சமீபத்தில், காதலர் தினத்தில் இணையத்தில் தங்களது காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர். படப்பிடிப்பு ஒன்றுக்காக ஓட்டலுக்கு வந்த அவர் மரணம் அடைந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியது.


ஆகான்க்சா துபே

இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக அவருடைய தாயார் மது குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கூறும்போது, சமருடன் ஆகான்க்சா 3 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். ஆனால், ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை. அந்த வகையில் சமர் கொடுக்க வேண்டிய பணம் ரூ.3 கோடி இருக்கும். ஒரு ஆல்பத்திற்கு ரூ.70 ஆயிரம் வீதம் சமர் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், ஆகான்க்சா பணம் கேட்கும்போது, சமர் அவளை அடித்து, சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.


ஆகான்க்சா துபே

பிற கலைஞர்களுடன் பணியாற்ற முயற்சி செய்தபோதும், அவளை சமர் துன்புறுத்தி வந்து உள்ளார். சமரின் பல ஆல்பத்தில் ஆகான்க்சா பணியாற்றி உள்ளார் என கூறியுள்ளார். ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். வாரணாசி போலீசார், மதுவின் புகாரின் பேரில் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News