சினிமா செய்திகள்

விஷால்

null

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி - நடிகர் விஷால்

Published On 2022-12-15 15:21 IST   |   Update On 2022-12-15 18:54:00 IST
  • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தற்போது நடித்துள்ள படம் லத்தி.
  • லத்தி திரைப்படம் வருகிற 22-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தற்போது நடித்துள்ள படம் லத்தி. இப்படத்தின் புரொமோஷனில் ஈடுப்பட்டு வரும் நடிகர் விஷால் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது, நான் நடித்த லத்தி திரைப்படம் வரும் 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஒவ்வொரு ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். இந்த திரைப்படத்தில் ஒரு 2-ம் நிலை காவலராக நடித்துள்ளேன். 8 வயது சிறுவனின் தந்தையாக நடித்துள்ளேன்.

விவாயிகளுக்கு தொடர்ந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். எங்கள் குழுவினர் சரியான விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கான உதவியை மேற்கொள்கின்றனர். விவசாயிகள் குறித்து சரியான திரைப்படம் எடுக்க வேண்டும். பிரச்சினைகள் குறித்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளையும் கூற வேண்டும்.

விஷால்

 

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது தான் அவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் வெறும் உதயாக இருந்தபோதில் இருந்தே எனக்கு தெரியும். நானும் அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்காக சேவை செய்து வருவது அரசியல் தான்.

 

உதயநிதி

சிறிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது மக்கள் அங்கு செல்வது குறைவாக உள்ளது. சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன. இலங்கை அகதிகள் முகாமில் எனது திரைப்படங்களை திரையிட நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. எனக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ளதால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை. திருமணம் குறித்து இப்போது முடிவெடுக்கவில்லை. விரைவில் அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News