சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி - சமுத்திரக்கனி

விஜய் சேதுபதி, சமுத்திரகனி கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் திருமணம்

Update: 2022-10-06 10:45 GMT
  • பன்னையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன்.
  • இவரின் திருமணத்தில் திரைத்துறையினர் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான பன்னையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். அதன்பின்னர் ஆரஞ்சு மிட்டாய், ஒரு நாள் கூத்து, தொண்டன், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் இசையமைத்து கவனத்தை ஈர்த்தார்.

 

சமுத்திரகனி, விஜய் சேதுபதி கலந்துக் கொண்ட ஜஸ்டின் பிரபாகரன் திருமணம்

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த திருமண நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி மற்றும் பாடகர் கிரிஷ் கலந்துக் கொண்ட புகைப்படத்தை கிரிஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News