சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி

'அடுத்தவன மட்டும் கூப்புடாதீங்க கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க' - வைரலாகும் விஜய் ஆண்டனி பதிவு..

Published On 2022-10-11 18:05 IST   |   Update On 2022-10-11 18:05:00 IST
  • இசையமைப்பாளர் நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
  • இவரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின்னர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.


விஜய் ஆண்டனி

இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.


விஜய் ஆண்டனி

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க.." என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Tags:    

Similar News