சினிமா செய்திகள்

சூரி

வீரம் நிறைந்த மண்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் சூரி..

Published On 2023-01-17 15:11 IST   |   Update On 2023-01-17 15:11:00 IST
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 7 மருத்துவ குழுக்கள் 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.


இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிகர் சூரி கண்டுகளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகப்புகழ் பெற்ற நம் பாரம்பரிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அன்பிற்கினிய சகோதரர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுடனும் மற்றும் மற்ற மதிப்பிற்குரிய அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் கண்டுகளித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ! வீரம் நிறைந்த மண்" என்று பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


Tags:    

Similar News