சினிமா செய்திகள்

புனித மெக்காவில் உம்ரா செய்த நடிகர் ஷாருக்கான்.. புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

Published On 2022-12-02 11:22 IST   |   Update On 2022-12-02 11:22:00 IST
  • இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.
  • இப்படத்திற்காக படக்குழுவினர் சவுதி அரேபியா சென்று படப்பிடிப்பு நடத்தினர்.

இந்தி நடிகர் ஷாருக்கான் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழுவினர் சவுதி அரேபியா சென்று படப்பிடிப்பு நடத்தினர். சவுதி அரேபியாவில் இயற்கை எழில்கொஞ்சும் வீடியோவை சமூக ஊடகங்களில் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.

 

 

அதில் சவுதி அரேபியாவில் படப்பிடிப்பை நடத்தியது திருப்திகரமாக உள்ளது. இதுபோன்ற அற்புதமான இடங்களையும், எல்லா இடங்களையும் எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் ஷாருக்கான் மெக்கா சென்று உம்ரா செய்தார். மெக்கா சென்ற ஷாருக்கானுடன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர்.

 

இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சவுதிஅரேபியாவில் கலாச்சார அமைச்சகத்தின் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மற்றும் அவர் மெக்காவில் உம்ரா செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News