சினிமா செய்திகள்

சமந்தா

எண்ணத்தில் தான் வலிமை இருக்கிறது - நடிகை சமந்தா

Published On 2023-01-28 07:55 GMT   |   Update On 2023-01-28 07:55 GMT
  • நடிகை சமந்தா தற்போது 'சாகுந்தலம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
  • இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது இவர் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


சமந்தா

மேலும், சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை சமந்தா உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கஷ்டமான நேரத்தில் என்னை உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்த பயிற்சியாளருக்கு நன்றி. கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறேன். சாப்பிடுவதால் மட்டும் வலிமை வராது, நாம் சிந்திக்கும் எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது என்று இப்போது கற்றுக்கொள்ள முடிந்துள்ளது'' என்று பகிர்ந்துள்ளார்.


சமந்தா

இந்த பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், இவர் நடிக்கும் வெப் தொடரில் சண்டை காட்சிகள் உள்ளன என்றும், அதில் நடிக்கவே கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Tags:    

Similar News