சினிமா செய்திகள்

துனிசா ஷர்மா

null

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பம்

Published On 2022-12-25 10:58 IST   |   Update On 2022-12-25 11:18:00 IST
  • நடிகை தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிசா ஷர்மா (வயது 20). மகாரானா பிரதாப் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் இஸ்க், சுப்ஹான் அல்லா, கப்பர் பூஞ்ச்வாலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

பிதூர், பார்பார் தேக்கோ, கஹானி-2; துர்கா ராணி சிங், தபாங்-3 உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் நேற்று அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தேனீர் இடைவேளையின் போது நடிகை துனிசா ஷர்மா மேக்கப் அறைக்கு சென்றார். அதன்பிறகு வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவலில்லை. இதனால் சந்தேகம் அடைந்த படப்பிடிப்பு நிர்வாகிகள் அறைக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

துனிசா ஷர்மா

 

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு துனிசா ஷர்மா மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

துனிசா ஷர்மா

 

இந்நிலையில் துனிசா ஷர்மாவின் தாயார் இதுதொடர்பாக வாலிவ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் துனிசா ஷர்மாவை அவருடன் நடித்த நடிகர் ஷீசன் முகமது கான் என்பவர் தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் துனிசா ஷர்மாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் முகமது கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ஷீசன் முகமது கான் ஜோதா அக்பர் என்ற வரலாற்று நாடகத்தில் இளம் வயது அக்பராக நடித்து தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு நாடகங்களிலும் நடித்த அவர் துனிசா ஷர்மாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்களில் சிக்கி இருந்தார்.

 

துனிசா ஷர்மா - ஷீசன் முகமது கான் 

 

இந்நிலையில் துனிசா ஷர்மா தற்கொலை வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். துனிசா ஷர்மா தற்கொலைக்கு செய்வதற்கு சிறிது நேரம் முன்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், 'தங்கள் பேரார்வத்தால் இயக்கப்படுபவர்கள் நிறுத்தப்படுவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News