சினிமா செய்திகள்

அக்‌ஷய்குமார்

படப்பிடிப்பில் நடிகர் அக்ஷய்குமாருக்கு காயம்

Published On 2023-03-25 11:14 IST   |   Update On 2023-03-25 11:14:00 IST
  • நடிகர் அக்‌ஷய்குமார் 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப், மலையாள நடிகர் பிரித்விராஜ், சோனாக்சி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


அக்ஷய் குமார்

இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் மோதும் சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியில் அக்ஷய்குமாருக்கு அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், சண்டை காட்சியை படமாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News