உர்பி ஜாவித்
பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
- பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவித் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.
- பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவித் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவர் நைட்டில பாப்புலர் ஆனார். தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்பி ஜாவித் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
உர்பி ஜாவித்
இந்நிலையில், உர்பி ஜாவித்திற்கு எதிராக கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக வேறு, வேறு எண்களை உபயோகப்படுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து நடிகை உர்பி ஜாவித்துக்கு அந்த நபர் பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார்.
உர்பி ஜாவித்
இதுபற்றி மும்பை கோரேகாவன் காவல் நிலையத்தில் உர்பி ஜாவித் புகார் பதிவு செய்துள்ளார். மிரட்டலான தொலைபேசி பேச்சுகள் அடங்கிய பதிவுகளையும் அவர் போலீசிடம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் நவீன் கிரி என தெரிய வந்தது. அவரை பீகாரின் பாட்னா நகரில் வைத்து போலீசார் கைது செய்து அவர் மீது பாலியல் துன்புறுத்தல், பின்தொடருதல் மற்றும் குற்ற நோக்கோடு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடந்தி வருகின்றனர்.