சினிமா செய்திகள்

ஷாருக்கான் 

ஷாருக்கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற 2 பேர் கைது

Published On 2023-03-03 15:00 IST   |   Update On 2023-03-03 15:00:00 IST
  • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான்.
  • இவரது வீட்டில் இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். மும்பையில் பாந்த்ரா பகுதியில் இருக்கும் அவரது பிரமாண்டமான மன்னத் வீடு எப்போதும் பாதுகாப்பு நிறைந்ததாகவே இருக்கும். தனியார் பாதுகாவலர்கள் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் ஷாருக்கானை பார்ப்பதற்காக ரசிகர்கள் வீட்டின் முன்பாக குவிந்தபடியே இருப்பார்கள்.

 

ஷாருக்கான் 


இந்நிலையில் நேற்று காலையில் இரு மர்ம ஆசாமிகள் ஷாருக்கான் வீட்டின் முன்புற சுவரைத்தாண்டிக் குதித்து வீட்டின் உள்ளே நுழைய முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களை பார்த்து விட்ட பாதுகாவலர்கள் உடனடியாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த வர்கள் என்றும் ஷாருக்கானின் தீவிர ரசிகர்கள் என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் பாதுகாப்பை மீறி நுழைந்ததால் அவர்கள் மீது அத்துமீறி நுழைதல் உள்படப் பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிந்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News