சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்று என்ன தெரியுமா..?

Published On 2023-04-05 11:29 GMT   |   Update On 2023-04-05 11:29 GMT
  • ’1947 ஆகஸ்ட் 16’ படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.
  • இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தில் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

1947 ஆகஸ்ட் 16

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இந்த படத்தில் கலையரசன், கடைக்காரன் என்ற கதாபாத்திரத்திலும் நீலிமா ராணி சின்ன வயது ஹீரோவின் அம்மாவாகவும் டேவிட், கரிகாலன் என்ற கதாபாத்திரத்திலும் போஸ் வெங்கட், பசுபதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தனர்.

1947 ஆகஸ்ட் 16 போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, '1947- ஆகஸ்ட் 16' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


Tags:    

Similar News