சினிமா செய்திகள்
இன்று மாலை 4.06 மணிக்கு வெளியாகிறது 'சூர்யா 46' பட அப்டேட்
- சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
- இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கருப்பு படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'சூர்யா 46' படத்தின் அப்டேட் மாலை 4.06 மணிக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.