சினிமா செய்திகள்
null

கமலுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நடிக்கும் ரஜினி - இயக்குநர் இவரா?

Published On 2025-10-15 12:21 IST   |   Update On 2025-10-15 12:26:00 IST
  • ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர்.
  • இப்படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.

இதன்மூலம் இப்படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று உறுதியானது. இதனால் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் கதை மற்றும் இயக்குநர் இன்னும் முடிவாகாததால் இப்படத்திற்கு முன்பாக வேறு ஒரு படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.

ஜெயிலர் 2 படத்திற்கு அடுத்து இந்த புதிய படத்தில் ரஜினி நடிப்பார் என்றும் இப்படத்தை இயக்க சுந்தர் சி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News