சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை

Published On 2023-09-03 16:16 IST   |   Update On 2023-09-03 16:16:00 IST
  • விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
  • விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார்.

'லியோ' படத்திற்கு அடுத்ததாக விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இதில் விஜய் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் ேதாற்றம் ஹாலிவுட் தரத்தில் 3டி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தில் மாற்றும் பணி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு, கல்பாத்தி அகோரம் அங்கு சென்றுள்ளனர்.

தந்தை விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் இன்னொரு விஜய்க்கு அம்மாவாக நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகாவிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் தற்போது அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

Tags:    

Similar News