சினிமா செய்திகள்

தன்மீது அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - பாடகி கெனிஷா அதிரடி நோட்டீஸ்

Published On 2025-05-25 20:21 IST   |   Update On 2025-05-25 20:21:00 IST
  • கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார்.
  • இது தொடர்பான நோட்டீசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெனீஷா பகிர்ந்துள்ளார்

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்து இருந்தார்.

இப்படி இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ரவிமோகன் விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பும் வகையிலும், ஆபாசமாகவும் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாடகி கெனிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான நோட்டீசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெனிஷா பகிர்ந்துள்ளார்

Tags:    

Similar News