சினிமா செய்திகள்

தமிழில் படங்கள் நடிக்காதது ஏன்? - ஷில்பா ஷெட்டி விளக்கம்

Published On 2025-07-12 08:54 IST   |   Update On 2025-07-12 08:54:00 IST
  • ‘குஷி' படத்தில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டதையும் மறக்க முடியாது.
  • ‘மிஸ்டர் ரோமியோ' படப்பிடிப்பின்போது பிரபுதேவாவும், வடிவேலுவும் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தனர்.

பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

சென்னையில் நடந்த பட விழாவில் ஷில்பா ஷெட்டி பங்கேற்று பேசும்போது, ''சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம். பலமுறை படப்பிடிப்புகளுக்காக சென்னை வந்திருக்கிறேன். எனக்கு பிடித்த தமிழ் உணவு மசாலா தோசை.

தமிழில் 'மிஸ்டர் ரோமியோ' படப்பிடிப்பின்போது பிரபுதேவாவும், வடிவேலுவும் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தனர். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.

'குஷி' படத்தில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டதையும் மறக்க முடியாது. அதன்பிறகு, சொல்லிக்கொள்ளும்படியான பெரிய படங்கள் எனக்கு தமிழில் வரவில்லை. அதனால் தான் தமிழில் படங்கள் நடிக்கவில்லை'', என்றார்.

Tags:    

Similar News