இறுதி ஊர்வலத்தில் ஆடக் கூடாதா? - இணையத்தில் பேசுபொருளான பிரியங்கா சங்கரின் நடனம்
- ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
- ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனம் ஆடினார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.
ஆனால், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது இணையத்தில் பேசுபொருளானது. பலரும் பிரியங்கா நடனம் ஆடி இருக்க கூடாது என்று அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். அதே சமயம், பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டனர்.
இந்நிலையில், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியதற்கு எதிரான பதிவுகளுக்கு பதிலளித்த தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தமிழ் காமராசன், "ஒரு கட்டுக்கடங்காத துக்கம், ஒரு பெரும் இழப்பு, எதுவும் செய்ய முடியாத நிலையில் என்ன பண்ண முடியும்? அந்த நேரத்தில் மனிதனுக்கு இறுதியாக இருக்கக்கூடிய ஒன்று நடனமும், இசையும், பாட்டும்தான்.. அதுதான் அவர்களை ஆற்றுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.