சினிமா செய்திகள்

Bare Body-ல் பிரதீப் ரங்கநாதன்:DUDE போஸ்டர் ரிலீஸ்

Published On 2025-05-11 15:16 IST   |   Update On 2025-05-11 15:16:00 IST
  • கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.
  • இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார்.

லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். டிராகன் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு நேற்று வெளியிட்டது. படத்தின் இரண்டாம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிரதீப் உடம்பில் சட்டை இல்லாமல் நிற்கிறார். பக்கத்தில் மமிதா பைஜு கண்ணாடி அணிந்து கொண்டு நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.

இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

Tags:    

Similar News