சினிமா செய்திகள்

பவன் கல்யாண் நடித்த ஹரி ஹர வீரமல்லு திரைவிமர்சனம்

Published On 2025-07-25 11:40 IST   |   Update On 2025-07-25 11:40:00 IST
  • 17 ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. நாயகன் பவன் கல்யாண் ஊரில் சின்ன சின்ன திருட்டு செய்து இல்லாதவர்களுக்கு உதவி வருகிறார்.
  • படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பவன் கல்யாண், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதைக்களம்

17 ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. நாயகன் பவன் கல்யாண் ஊரில் சின்ன சின்ன திருட்டு செய்து இல்லாதவர்களுக்கு உதவி வருகிறார். ஒரு பக்கம் முகலாயர்கள் இந்துக்கள் வாழும் பகுதிகளை அழித்து நாட்டை தன்வசமாக்கி வருகிறார்கள். அப்படி இந்துக்களை அடிமையாக்கி பல மாகாணங்களை தன்வசமாக்கி வைத்து இருக்கிறார் பாபி தியோல். மேலும் இவர் கோஹினூர் வைரத்தை வைத்து இருப்பதால், அதை திருடி கொடுக்க பவன் கல்யாணுக்கு அழைப்பு வருகிறது. இதை ஏற்றுக் கொள்ளும் பவன் கல்யாண், பாபி தியோலை தேடி செல்கிறார்.

இறுதியில் பவன் கல்யாண் கோஹினூர் வைரத்தை கண்டு பிடித்தாரா? பாபி தியோல் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துக்களை பவன் கல்யாண் மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பவன் கல்யாண், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அடிமை மக்களுக்காக போராடுவது, எதையும் துணிந்து செய்வது, காதலிப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பாபி தியோல். மிடுக்கான தோற்றத்தால் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இவரது உடல் மொழி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. சத்யராஜ், ஈஸ்வரிராவ் உள்ளிட்ட பலர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

இயக்கம்

17 ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருந்தது என்பதை வரலாற்று பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர் கிரிஷ் ஜாகர்லாமுடி, ஜோதி கிருஷ்ணா. பவன் கல்யாண் ரசிகர்களுக்காக பல கமர்சியல் அம்சங்கள் வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். பல இடங்களில் ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் ஒரு சில இடங்களில் எதார்த்த மீறலாக அமைந்துள்ளது.

தலை குனிந்து இருக்கும் மக்களை நிமிர வைப்பது, ஆடு புலி ஆட்டத்தில் நடக்கும் சண்டைக் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பல காட்சிகளில் பவன் கல்யாணுக்கு காலில் றெக்கை கட்டியது போல் பறக்கிறார். இதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

ஒளிப்பதிவு

ஞான சேகர் மற்றும் மனோஜ் பரமம்சா ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு.

இசை

கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

தயாரிப்பு

Mega Surya Production நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது

ஹரி ஹர வீரமல்லு - 3/5

Tags:    

Similar News