சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் நடிக்கும் குமாரசம்பவம் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது..!

Published On 2025-08-20 19:48 IST   |   Update On 2025-08-20 19:48:00 IST
  • நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இப்படித்தை இயக்கியுள்ளார்.
  • இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

இப்படத்திற்கு குமாரசம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார்.

Full View

இப்படத்தை வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம தயாரித்துள்ளது. இதற்கு முன் இந்த நிறுவனம் யாத்திசை திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையின் படத்தின் முதல் சிங்கிளான விடியாத இரவொன்று.. பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News