சினிமா செய்திகள்

இன்று மாலை வெளியாகும் நித்தின் நடித்த Thammudu பட டிரெய்லர்

Published On 2025-06-30 11:33 IST   |   Update On 2025-06-30 11:33:00 IST
  • தெலுங்கு நடிகரான நித்தின் அடுத்ததாக தம்முடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தெலுங்கு நடிகரான நித்தின் அடுத்ததாக தம்முடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வேனு ஸ்ரீராம் இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் ரிலீஸ் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. திரைப்படம் ஒரு ஆக்ஷன் அதிரடியாக உருவாகியுள்ளது. படத்தில் காந்தாரா புகழ் சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் லயா, ஸ்வாசிகா, வர்ஷா பொல்லம்மா, சௌரப் சச்தேவா நடித்துள்ளனர். படத்தின் இசையை அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தில்ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

சமீப காலமாக நித்தின் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் இப்படம் வெற்றி பெரும் என ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News