சினிமா செய்திகள்

ஜெயிலர் 2 படம் குறித்து நெல்சன் கொடுத்த அப்டேட்!

Published On 2025-08-31 14:22 IST   |   Update On 2025-08-31 14:22:00 IST
  • ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.

படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். மேலும் இந்த வரிசையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட நெல்சன் ஜெயிலர் 2 குறித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது "நான் படக்கதையை எழுதியவரை நன்றாக இருக்கிறது. ஜெயிலர் 2 கதையாக நன்றாக இருக்கிறது. படப்பிடிப்பு முடியாமல் நான் எதையும் சொல்ல முடியாது. மக்களுக்கு திரைப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்" என கூறினார்.

படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்

Tags:    

Similar News