சினிமா செய்திகள்

என் சிம்பொனியை என்னுடைய மக்கள் கேட்க வேண்டும் - தனது பிறந்தநாளில் இனிய செய்தி சொன்ன இசைஞானி!

Published On 2025-06-02 12:43 IST   |   Update On 2025-06-02 12:43:00 IST
  • இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
  • இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள முக்கியஸ்தர்கள், நடிகர்கல், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது

"எனது பிறந்தநாளிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றி. இந்த நாளில் ஒரு இனிமையான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை , அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்தப் போகிறேன், இந்த இனிய செய்தியை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்"

Tags:    

Similar News