null
வரலாறு படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்
- 2005 இல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது.
- தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். படம் வெளியாகி 26 நாட்களான நிலையில் உலகளவு வசூலில் 200 கோடி வசூல் செய்துள்ளது. மலையால சினிமா திரையுலகில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. படம் வெளிவந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் இப்படம் 200 கோடி வசூலிக்கப்பட்டது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
2005-ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் போது குணா குகையில் அவர்களின் நண்பன் ஒருவன் மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு அடுத்து என்ன ஆகிறது, நண்பர்கள் எல்லாம் அவனை எப்படி காப்பற்றுகிறார்கள் என்பதே மீதிக் கதை.
நட்பின் உன்னதத்தையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தி குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாட்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்ததே இப்படத்தின் முக்கிய வெற்றி. சமீபத்தில் நடந்த நேர்காணலில் பிருத்திவிராஜ் சுகுமாரன் எப்படி மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற மலையாளப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் மலையாளப் படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பும், வெற்றி பெற உதவியும் செய்கிறது என்று விவரித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்