சினிமா செய்திகள்

மணிகண்டன் நடிக்கும் அடுத்த பட அப்டேட்!

Published On 2025-07-06 13:09 IST   |   Update On 2025-07-06 13:09:00 IST
  • மணிகண்டன் கதாநாயகனாக நடித்த குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய மூன்று திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படமாக உருவானது.
  • சிம்புவின் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்த குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய மூன்று திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படமாக உருவானது. அடுத்ததாக மணிகண்டன் வெற்றி மாறன் இயக்கும் சிம்புவின் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில் மேலும் மணிகண்டன் கதாநாயகனாக மக்கள் காவலன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சந்தோஷ் குமார் இயக்குகிறார். படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கிறார். இப்படம் ஒரு சாதி ரீதியாக நடக்கும் அரசியலை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News