சினிமா செய்திகள்

ஆஸ்கார் திரையிடலுக்கு தேர்வாகி சாதனை படைத்த மம்மூட்டியின் திகிலூட்டும் 'பிரம்மயுகம்'

Published On 2026-01-09 10:45 IST   |   Update On 2026-01-09 10:45:00 IST
  • நான் கேட்டு வளர்ந்த கதைகள், என்னுள் இருந்த பயங்கள் மற்றும் மௌனங்களின் வெளிப்பாடே பிரம்மயுகம்.
  • 'Where the Forest Meets the Sea' என்ற சிறப்புத் திரையிடல் இதுவாகும்.

மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'பிரம்மயுகம்'.

இந்நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 12, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது.

உலகளவில் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திகில் படங்களுக்காக நடத்தப்படும் 'Where the Forest Meets the Sea' என்ற சிறப்புத் திரையிடல் இதுவாகும். 

ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படும் மம்மூட்டியின் முதல் திரைப்படம் இதுவாகும். மேலும் இந்த பிரிவில் திரையிடப்பட தேர்வான முதல் இந்திய படம் இதுவாகும். 

இது குறித்து இயக்குநர் ராகுல் சதாசிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நான் கேட்டு வளர்ந்த கதைகள், என்னுள் இருந்த பயங்கள் மற்றும் மௌனங்களின் வெளிப்பாடே பிரம்மயுகம்.

மொழி மற்றும் நிலங்களைக் கடந்து இந்தப் படம் அங்கீகரிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பிரம்மயுகம் படத்துடன் புகழ்பெற்ற திகில் திரைப்படங்களான 'Midsommar', 'The Witch' மற்றும் 'The Wicker Man' போன்ற படங்களுடன் இதில் திரையிடப்படுகிறது.   

Full View
Tags:    

Similar News