சினிமா செய்திகள்
நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டும் மம்மூட்டி.. 'களம்காவல்' டிரெய்லர் ரிலீஸ்
- படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார்.
- நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.
குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் உருவாகி உள்ளது. படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல்துறைக்குச் சவால்விடும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இப்படத்தை அவரின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரித்துள்ளது.
அண்மையில் படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது .
இப்படம் நவம்வர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.