சினிமா செய்திகள்

லப்பர் பந்து 1 வருட நிறைவு... தமிழரசன் பச்சமுத்து இயக்கும் அடுத்த படம் - நெகிழ்ச்சி பதிவு

Published On 2025-09-20 17:16 IST   |   Update On 2025-09-20 17:16:00 IST
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியான படம் லப்பர் பந்து.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றுடன் லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனை நினைவூட்டும் வகையிலும் மக்களுக்கு நன்றி சொல்லும் விதத்திலும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் "நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!

first show முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க..

இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு…

ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும் ?❤️❤️

இப்டி என்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்! ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்..

தனுஷ் சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு … நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்"

Tags:    

Similar News