சினிமா செய்திகள்
null

விஜய் அண்ணா இல்லாமல் LCU முழுமையடையாது - லோகேஷ் கனகராஜ்

Published On 2025-07-29 14:55 IST   |   Update On 2025-07-29 14:58:00 IST
  • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'கூலி' படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பிஸியாக உள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,
  • அடுத்து என்ன திரைப்படங்கள் இயக்கவுள்ளார் என்பதை பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'கூலி' படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பிஸியாக உள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன் பழைய கல்வி நிலையமான பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் வளாகத்திற்கு நேற்று நேரில் சென்றார்.

மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் கூலி திரைப்படத்தை பற்றியும் அவர் அடுத்து என்ன திரைப்படங்கள் இயக்கவுள்ளார் என்பதை பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அடுத்து, விஜய் எப்போது LCU-வில் திரும்புவார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்தார்:

மாணவர்களுடன் நடந்த கேள்வி-பதில் நேரத்தில், நடிகர் சூர்யாவுடன் பணியாற்றும் வாய்ப்பைப் பற்றி கேட்டபோது, லோகேஷ் கூறினார்:

"2003 முதல் 2006 வரை இங்கு மாணவராக இருந்த காலத்தில், சூர்யா சார் நடித்த ஆயுத எழுத்து, பிதாமகன், மாயாவி, காக்க காக்க போன்ற படங்களை திரையரங்குகளில் பார்த்தேன். இன்று நான் இயக்குநராக அவருடன் வேலை செய்வது எனது கனவு. ஆனால் அது எங்கள் இருவரின் டைம்லைனும் ஒன்றாக அமையும் போது கண்டிப்பாக அவரை வைத்து இயக்குவேன்" என கூறியுள்ளார்.

"LCU விஜய் அண்ணா இல்லாமல் முழுமையடையாது . ஆனால் தற்போது அவர் அரசியலில் முழுமையாக ஈடுபட்டிருப்பதால், அவர் திரும்புவாரா இல்லையா என்பதை அவர் தான் கூற வேண்டும், அவருக்கு பதிலாக நான் பதில் சொல்ல முடியாது" என கூறினார்.

Tags:    

Similar News