சினிமா செய்திகள்

ஹாரர் காட்சிகள் நிறைந்த "ஜென்ம நட்சத்திரம்" திரைப்பட டிரெய்லர் வெளியீடு!

Published On 2025-07-12 11:36 IST   |   Update On 2025-07-12 11:36:00 IST
  • "ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.
  • படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர்.

"ஜென்ம நட்சத்திரம்" திரைப்படம் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர்.

ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ஒரு நொடி பட இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். 

இப்படத்தை உலகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பல திகிலூட்டும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

Full View

Tags:    

Similar News