சினிமா செய்திகள்
Its a business model.. மருந்து வியாபாரம் - கார்ப்பரேட் லாப வெறி - நிவின் பாலியின் "Pharma" டிரெய்லர்
- ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார்.
- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாக உள்ளது.
நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் சர்வம் மாயா என்ற படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாக உள்ளது.
இதற்கிடையில் பி.ஆர். அருண் எழுதி இயக்கியுள்ள 'பார்மா' என்ற வெப் தொடரில் நிவின் பாலி நடித்திருந்தார் .
இந்த படம் வரும் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த தொடரின் டிரெய்லர் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.