சினிமா செய்திகள்

வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தால் பாதிப்பா? அதர்வா விளக்கம்

Published On 2025-11-28 07:42 IST   |   Update On 2025-11-28 07:42:00 IST
  • தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் ‘பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.
  • விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவர் முரளி. அவரது மூத்த மகனான அதர்வா வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிக்கிறார். அதர்வாவின் நடிப்பில் இந்தாண்டு வெளியான டி.என்.ஏ. படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் 'பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.

அதர்வாவிடம் 'வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா பதிலளிக்கையில் ''விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது. என்னதான் ஒரு அடையாளத்துடன் வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கென உத்வேகத்தை தந்தது. அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை'', என்றார்.

Tags:    

Similar News