சினிமா செய்திகள்
null

தனுஷின் இட்லி கடையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்... OTT ரிலீஸ் அப்டேட்

Published On 2025-10-02 13:11 IST   |   Update On 2025-10-06 15:39:00 IST
  • தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
  • இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். 'இட்லி கடை' நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் வெளியான முதல் நாளிலே நல்ல வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் மேலும் வசூல் குவிக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே, 'இட்லி கடை' திரைப்படம் எப்போது ஓ.டி.டி.யில் வெளியாகும் என ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில், இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 'இட்லி கடை' படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் தளம் பெற்றுள்ளதாகவும், நவம்பர் மாதம் இப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News