சினிமா செய்திகள்

எப்படி சார் இவ்வளவு Hot-ஆ இருக்கீங்க?- திரிஷா கேள்வியில் அதிர்ந்த கமல்ஹாசன்

Published On 2025-09-08 13:19 IST   |   Update On 2025-09-08 13:19:00 IST
இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

நடிகர் கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்ற தகவல் அண்மையில் வெளியானது.

சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் திரிஷா நடிகர் கமல்ஹாசனை பற்றி கூறீயது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கமலை பார்த்து " எப்படி சார் இத்தனை வருடங்களும் அதே ஹாட்டாக கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிங்க?" என கேட்டார். அதற்கு நன்றி தெரிவித்து கமல் கொடுத்த ரியாக்ஷன் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

Tags:    

Similar News