சினிமா செய்திகள்

ரவி மோகன் படத்திற்கு 'BRO CODE' பெயரை பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை

Published On 2025-10-28 12:09 IST   |   Update On 2025-10-28 12:09:00 IST
  • இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
  • ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல்

நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி BRO CODE படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என ப்ரோ கோட் பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பான அந்நிறுவனம் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்காலத்தடை விதித்தது.

பிரபலமாக உள்ள ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல் என்ற வாதத்தை ஏற்ற உயநீதிமன்றம், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திரைப்பட விளப்பரம், வெளியீட்டிற்கு ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்தத்தடை விதித்தது.

இது குறித்து ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

Tags:    

Similar News