சினிமா செய்திகள்

கணவரின் புகைப்படங்கள் நீக்கம்: விவாகரத்து முடிவில் ஹன்சிகா?

Published On 2025-08-06 07:53 IST   |   Update On 2025-08-06 07:53:00 IST
  • கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார்.
  • விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா தனது கணவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார். கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனைதான் இதற்கு காரணம் என்று பேசப்படுகிறது.

ஹன்சிகா விரைவில் விவாகரத்து முடிவை நாட இருப்பதாக பேசப்படுகிறது. ஆனாலும் இதனை சோஹைல் கட்டாரியா மறுத்துள்ளார். அவர் மறுத்தாலும் இந்த விவகாரத்தில் ஹன்சிகா மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள கணவரின் புகைப்படங்களை ஹன்சிகா அதிரடியாக நீக்கி இருக்கிறார். விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

இதனால் ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டதாகவே பேச்சு அடிபடுகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News