சினிமா செய்திகள்

ஏ.ஆர். ரகுமான் இசையில் ஜீனி படத்தின் முதல் பாடல் அப்டி அப்டி வெளியானது

Published On 2025-10-07 21:19 IST   |   Update On 2025-10-07 21:19:00 IST
ரவி மோகன், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளனர்.

ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜீனி. இப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய 2 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் கடந்தாண்டு வெளியானது. அதில் அலாவுதீன் பூதத்தைப்போல் ரவி மோகன் இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படத்தை அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிக்கிறது.

ஃபேண்டசி மற்றும் காமெடி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ரவி மோகன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.

Full View

இந்நிலையில், ஜீனி படத்தின் அப்டி அப்டி பாடல் இன்று இரவு வெளியானது. பாடல் வரிகளை மசூக் ரகுமான் எழுத, மேசா கரா, தீப்தி சுரேஷ் பாடியுள்ளனர்.

Tags:    

Similar News