சினிமா செய்திகள்

எஸ்.ஜே சூர்யா இயக்கும் Killer படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்!

Published On 2025-07-19 12:44 IST   |   Update On 2025-07-19 12:44:00 IST
  • எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
  • படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.. இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் ஒருவன் காதலலுக்காக மற்றொருவன் மிஷனுக்காக என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.

எஸ்ஜே சூர்யா அடுத்து சர்தார் 2 மற்றும் லவ் இன்சூரன் கம்பெனி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News