சினிமா செய்திகள்
null

தல, தல என கூச்சலிட்ட ரசிகர்கள்... சட்டென கண்டித்த அஜித்

Published On 2025-10-28 11:50 IST   |   Update On 2025-10-28 15:54:00 IST
  • தரிசனம் முடிந்து வெளியே வந்த அஜித்தை பார்த்த ஆண்களும், பெண்களும் தல, தல என கூச்சலிட்டனர்.
  • திருப்பதி கோவிலில் அஜித் தரிசனம் செய்த காட்சிகள், ரசிகர்களை எச்சரித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் சினிமா மற்றும் கார் பந்தயங்களில் பிசியாக இருந்து வருகிறார். படப்பிடிப்பு மற்றும் கார் பந்தயங்கள் இல்லாத நாட்களில் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள கோவிலில் அஜித் தரிசனம் செய்த காட்சிகள் வைரலானது.

இந்நிலையில் திருப்பதி கோவிலில் இன்று காலை தரிசனம் செய்துள்ளார். சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்த அஜித்துக்கு ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தரிசனம் முடிந்து வெளியே வந்த அஜித்தை பார்த்த ஆண்களும், பெண்களும் தல, தல என கூச்சலிட்டனர்.

இதையடுத்து அஜித் கூட்டத்தினரை நோக்கி இது கோவில் இங்கு கூச்சலிட கூடாது என சைகை மூலம் எச்சரித்தார். தொடர்ந்து அவர் நடந்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் ஓடி வந்து புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்றார். இதையடுத்து ரசிகரிடம் இருந்த செல்போனை வாங்கி அஜித் ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

திருப்பதி கோவிலில் அஜித் தரிசனம் செய்த காட்சிகள், ரசிகர்களை எச்சரித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News