சினிமா செய்திகள்
null
காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கினாரா? - இணையத்தில் தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன?
- காஜல் அகர்வால் 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- காஜல் அகர்வால் தற்போது 'ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார்.
தற்போது 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார்.
திருமணமாகி குழந்தை பிறந்த பின்பு, மீண்டும் முன்புபோல சினிமாவில் கோலோச்ச காஜல் தயாராகி விட்டார். இதற்காக ஜிம்மில் கடும் உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் மீண்டும் கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவியது.
ஆனால் இணையத்தில் பரவும் இத்தகைய தகவல் வதந்தி என்று நடிகை காஜல் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.