சினிமா செய்திகள்

தனுஷ் தயாரிப்பில் D55- மம்முட்டி, சாய் பல்லவி நடிக்க வாய்ப்பு

Published On 2025-11-28 11:55 IST   |   Update On 2025-11-28 11:55:00 IST
  • D55 படத்தில் இருந்து கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளது.
  • இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்‌ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் D55. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் D55 படத்தில் இருந்து கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளது. இப்போது இப்படம் தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாக உள்ளது.




இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். மலையாள நடிகர் மம்முட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இதற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News