சினிமா செய்திகள்

'தேரே இஷ்க் மே' ப்ரோமோசனுக்காக மும்பை பறந்த தனுஷ்..!

Published On 2025-11-11 16:30 IST   |   Update On 2025-11-11 16:30:00 IST
D5 படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்தி பட ப்ரோமோசனுக்காக மும்பை சென்றுள்ளார்.

தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தை தொடர்ந்து, தனது 54-ஆவது படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். தனுஷ்-க்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து தனது இந்தி திரைப்படத்தின் ப்ரோமோசனுக்காக தனுஷ் மும்பை சென்றுள்ளார்.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'தேரே இஷ்க் மே'. முன்னணி பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28-ம்தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தனது 54ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இந்தி படம் ப்ரோமோசனுக்காக மும்பை சென்றுள்ளார்.

Tags:    

Similar News