சினிமா செய்திகள்

VIDEO: தெருநாய் தொடர்பான விவாதம் - மன்னிப்பு கேட்டார் நடிகர் படவா கோபி

Published On 2025-09-01 14:07 IST   |   Update On 2025-09-01 14:07:00 IST
  • தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெருநாய் சர்ச்சை தொடர்பான விவாதம் நடைபெற்றது.
  • விவாதத்தில் நடிகர் படவா கோபி பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.

இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.

பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.

நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெருநாய் சர்ச்சை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் படவா கோபி பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் நடிகர் படவா கோபி மன்னிப்பு கேட்டார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "டிவி நிகழ்ச்சியில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. என் கருத்தை முழுமையாக நிகழ்ச்சியில் தெரிவிக்கவே விடவில்லை. நாய்களால் பாதிக்கப்பட்டோரின் மனநிலையிலும், நாய் அபிமானிகளின் எண்ணத்தை பிரதிபலிக்கவும் பேசினேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News