சினிமா செய்திகள்
null

தர்ஷன் நடித்த House Mates படத்திற்கு யு சான்றிதழ்

Published On 2025-07-24 15:00 IST   |   Update On 2025-07-24 16:40:00 IST
  • சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
  • தர்ஷன், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் தர்ஷன். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அடுத்ததாக தர்ஷன், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. கதாநாயகன் வீடு வாங்குகிறார் அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இது ஒரு காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 9 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News